Saturday, February 10, 2018

2018 நிதிநிலை அறிக்கை
மக்களின் கோப நெருப்பின் மீது ‘மோடி கேர்’ எண்ணெய் ஊற்றுகிறது

வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மோடி அரசின் கடைசி முழு நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1 அன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

Thursday, February 1, 2018

2018 நிதிநிலை அறிக்கை
வெற்று வாய்வீச்சு, பொய்யான சாதனைகள்
ஆனால் நெருக்கடியில் இருக்கும் மக்களுக்கு தீர்வில்லை

1 பிப்ரவரி 2018, புதுதில்லி

அருண் ஜெட்லியின் முந்தைய நிதிநிலை அறிக்கைகள் போல, 2018 நிதிநிலை அறிக்கையும் ஸ்தூலமான ஒதுக்கீடுகள் இல்லாமல், அமலாக்க நடவடிக்கைகள் இல்லாமல் பெரிய அறிவிப்புகளாக மட்டும் உள்ளது. 2022ல் விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்குவது என்ற வெற்று வாக்குறுதியை மீண்டும் சொல்கிற நிதிநிலை அறிக்கையில், கிராமப்புற பொருளாதாரத்தை நாசமாக்கிவிட்ட விவசாய நெருக்கடிக்கு தீர்வேதும் இல்லை. நாடெங்கும் உள்ள விவசாய அமைப்புகள் கடனில் இருந்து விடுதலை வேண்டும் என்று எழுப்பிய கோரிக்கை பற்றி அது எதுவும் சொல்லவில்லை. குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான எம்எஸ் சுவாமிநாதன் ஆணைய பரிந்துரைகளை அமலாக்குவது பற்றி அறிக்கை சொல்வது பொய்யானதாக இருக்கிறது. இடுபொருட்கள் செலவு கணக்கிடும் அரசாங்கத்தின் வழிமுறை, அவ்வப்போது ஏற்படும் செலவுகளை மட்டும் கணக்கில் கொள்கிறதே தவிர, விவசாயிகளுக்கு ஏற்படும் நிலையான செலவுகளை கணக்கில் கொள்ளவில்லை. அதேபோல், குறைந்தபட்ச ஊதியம், பணிப்பாதுகாப்பு, சமூகப்பாதுகாப்பு, தொழிலாளர் அந்தஸ்து, சமவேலைக்கு சம ஊதியம் போன்ற தொழிற்சங்கங்களின் அரசத் திட்டத் தொழிலாளர்களின் அடிப்படை கோரிக்கைகள் பற்றி நிதிநிலை அறிக்கை மவுனம் காக்கிறது. நூறு நாள் வேலைத் திட்டத்துக்கான ஒதுக்கீடு சென்ற ஆண்டு இருந்த அளவே உள்ளது. பல மாநிலங்களிலும் சட்டபூர்வமான குறைந்தபட்ச ஊதியத்தை விட நூறு நாள் திட்டக் கூலி குறைவாகவே உள்ளது; சட்டத்தின்படி ஒரு குடும்பத்துக்கு ஆண்டில் 49 நாட்கள் வேலைதான் கிடைத்துள்ளது.

இந்திய மக்களின் இரண்டு பெரிய பொருளாதாரப் பிரச்சனைகளான வேலை வாய்ப்பின்மை, அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை எதிர்கொள்ள நிதிநிலை அறிக்கை மறுக்கிறது. 2017ல் வெறும் 1% பேர் 73% செல்வங்களை குவித்துள்ள போதிலும், அதிபணக்காரர்களுக்கு கூடுதல் வரி போடப்படவில்லை. மருத்துவம் பற்றி பெரிதாகப் பேசுகிற நிதிநிலை அறிக்கை, பொது சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவது பற்றி பேசுவதற்குப் பதிலாக, வறிய மக்களுக்கு காப்பீட்டை அதிகரிப்பது பற்றி பேசுகிறது. இது தனியார் மருத்துவமனைகளுக்கும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கும்தான் ஆதாயமாக இருக்கும். அரசின் கருவூலம் பாதிப்புக்குள்ளாகும். பணமதிப்பகற்றம் உருவாக்கிய பொருளாதார கலவரம், அழிவு ஆகியவற்றின் விளைவுகளை நாடு இன்னும் சந்தித்துக் கொண்டிருக்கும்போது, அருண் ஜெட்லி, அது நேர்மையின் திருவிழா என்று சொல்லி மக்கள் சந்தித்த துன்பங்களை, அதனால் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட சேதத்தை பரிகாசம் செய்கிறார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் மற்றும் வறிய மக்கள் பிரச்சனைகளில் அரசு காக்கும் மவுனத்துக்கும் வெற்று வார்த்தைகளுக்கும் அரசை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என இககமாலெ அழைப்பு விடுக்கிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், அரசுத் திட்ட பெண் தொழிலாளர்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோரின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான போராட்டங்களை தீவிரப்படுத்த கட்சி உறுதியேற்கிறது.
                                                                                                        திபங்கர்
பொதுச் செயலாளர், இகக மாலெ(விடுதலை)
பாஜக ஆர்எஸ்எஸ்சின் காஸ்கஞ்ச் மதவெறி சதியை முறியடிப்போம்

உத்தரபிரதேசத்தின் காஸ்கஞ்ச் மட்டுமின்றி, காஸ்கஞ்ச் பிரச்சனையை பயன்படுத்தி நாடு முழுவதும் மதவெறித் தீயை மூட்டிவிட சங்பரிவாரும் பாஜகவும் முயற்சி செய்கின்றன.

மூவர்ணக் கொடியை உயர்த்திப் பிடித்ததற்காக, நாட்டுப் பற்று முழக்கங்களை எழுப்பியதற்காக இசுலாமியர்கள் இந்துக்களை தாக்கினார்கள் என்று மதவெறி, பிளவுவாத பிரச்சாரம் செய்தி பரப்புகிறது. இசுலாமியர்கள் பாகிஸ்தான் கொடிகளை வைத்திருந்ததாகவும் பாகிஸ்தான் ஆதரவு முழக்கங்கள் எழுப்பியதாகவும் செய்தி பரப்பப்படுகிறது. மூவர்ணக் கொடியை ஏற்றியதற்காக சந்தன் என்கிற இந்துவை இசுலாமியர்கள் சுட்டுக் கொன்றுவிட்டனர் என்று மதவெறிப் பிரச்சாரம் சொல்கிறது. இது சமூக ஊடகங்களில் அனாமதேயமாக பரப்பப்படுவதுடன், தொலைக்காட்சி அலைவரிசைகளின் பிரச்சனையை பெரிதாக்கும் விதத்தில் பேசும் செய்தியாளர்களால் ஊதிப்பெரிதாக்கப்படுகிறது. பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வினய் கத்தியார் மீண்டும் மீண்டும் அதையே சொல்கிறார்.

மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இந்த மதவெறி பொய்களை எதிர்கொள்ள நேர்ந்தது. இசுலாமியர் தேசியக் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடத்தியதாகவும் திரங்கா யாத்திரை என்று சொல்லப்படுகிற யாத்திரையை நடத்திய காவிக் கொடிகளுடன் வந்த இளைஞர்கள் அந்த நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் காவல்துறை சொல்கிறது. இசுலாமியர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று பொருள்படும்படி, காவிக் கொடியேந்திய இளைஞர்கள் வன்முறையை தூண்டுகிற மதவெறி முழக்கங்கள் எழுப்பியதாகவும் சொல்கிறது. சந்தன் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில், துப்பாக்கி ஏந்திய சங்கி இளைஞர்கள் இசுலாமியர்கள் வீடுகள் நோக்கிச் சுட்ட காட்சிகள் கொண்ட காணொளி உள்ளதாக காவல்துறை சொல்கிறது. இது சந்தன் பதில்தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சொல்வது போல் உள்ளது.

பரேலி மாவட்ட ஆட்சியர் பேஸ்புக் பதிவு அங்கு நடந்த அரசியலை அம்பலப்படுத்தியது; இசுலாமியர் வாழும் பகுதிகளில் பலவந்தமாக பேரணி நடத்துவது, பாகிஸ்தான் எதிர்ப்பு முழக்கங்கள் எழுப்புவது என்பது ஒரு வினோதமான செயல்பாட்டுமுறை. ஏன் இப்படிச் செய்ய வேண்டும்? அவர்கள் பாகிஸ்தானியர்களா? பரேலியிலும் இப்படித்தான் நடந்தது. அதன் பிறகு அங்கு கல்லெறி நடந்தது. முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.... இந்த நேர்மையான மாவட்ட ஆட்சியர் அதன் பிறகு அந்தப் பதிவை நீக்க நிர்ப்பந்தப்படுத்தப்பட்டார். ஆனால், அதற்கான விளக்கமாக அவர் வெளியிட்ட பதிவில், இந்திய இசுலாமியர்களை  நாட்டின் எதிரிகளாக  காட்டும் மதவெறி பிளவை, நஞ்சை எதிர்ப்பது அவரைப் போன்ற அரசு அதிகாரிகளின் கடமை என்று சொல்லியுள்ளார்.

நாடு விடுதலை பெற்றபோது, நாட்டு விடுதலைப் போராட்டத்துக்கு துரோகமிழைத்த ஆர்எஸ்எஸ், இந்து பாரம்பரியத்தில் மூன்று என்ற எண் அமங்கலமானது என்பதால் மூவர்ணக் கொடியை இந்தியாவின் தேசியக் கொடியாக ஏற்கவே முடியாது என்றது. வெவ்வேறு மத நம்பிக்கைகள் கொண்ட இந்திய மக்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ்சின் இந்தப் பிரச்சாரத்தை நிராகரித்தனர். காவிதான் இந்திய தேசியக் கொடி என்று சொன்ன, பல பத்தாண்டுகளாக மூவர்ணக் கொடியை புறக்கணித்த ஆர்எஸ்எஸ் இன்று அந்த மூவர்ணக் கொடியையே பயன்படுத்தி இந்தியாவின் மதச்சார்பின்மை இழை மீது தாக்குதல் தொடுக்கிறது. அவர்களது திரங்கா யாத்திரைகள் மூவர்ணக் கொடியை ஒற்றுமையின் கொடியாக பயன்படுத்தவில்லை. மாறாக, சிறுபான்மையினர், மதச்சார்பின்மை மதிப்பீடுகள், எதிர்ப்பாளர்களுக்கு எதிராக பயன்படுத்துகின்றன. தாத்ரியில் அக்லக்கை தாக்கிய கொலை கும்பலைச் சேர்ந்த ஒருவர் இறுதி ஊர்வலத்தில் அவரது உடலுக்கு மூவர்ணக் கொடி போர்த்தப்பட்டிருந்தது. இந்த ஊர்வலத்தில் மோடி அரசாங்கத்தின் கலாச்சார அமைச்சர் கலந்துகொண்டார். மதவெறி பாசிசத்தின் பிளவுவாத வன்முறை சதிகளுக்கு போர்த்தும், அவற்றை சட்டபூர்வமாக்கும் இந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும்.

மதவெறி வன்முறையும் அதற்கான தீர்வும் என்ற தனது கட்டுரையில் பகத் சிங், பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் பிரித்தாளும் சூழ்ச்சி பற்றி எச்சரிக்கிறார்; அதே மதவெறி பிளவுவாத அரசியலில் ஈடுபடும் இந்திய தலைவர்களுக்கு எதிராகவும் எச்சரிக்கை விடுக்கிறார். இன்று ஆர்எஸ்எஸ்சும் பாஜகவும் அதே பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தி, மோடி காப்பாற்றத் தவறிய வாக்குறுதிகளில் இருந்து கவனத்தை திருப்புகின்றன.

படுமோசமான வேலைவாய்ப்பின்மை, விவசாய நெருக்கடி, ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை இன்றைய இந்தியா எதிர்கொள்கிறது. பொருளாதார ஆய்வறிக்கை, பாதுகாப்பற்ற அமைப்புசாரா துறை வேலைவாய்ப்புகளை, அமைப்பாக்கப்பட்ட துறை வேலைகளாகக் காட்டி வேலைவாய்ப்பின்மையை மறைக்கப் பார்க்கிறது. மோடியின் பகோடா பொருளாதார மாதிரியைத் தொடர்ந்து, ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ள முறைசாரா சிறுதொழில்களில் வேலை செய்பவர்கள், பணிப்பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியம், சமூகப் பாதுகாப்பு போன்றவை இல்லாதபோதும் முறைசார்ந்த வேலைவாய்ப்பு பெற்றவர்களாக கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற பற்றியெரியும் பிரச்சனைகளில் இருந்து கவனத்தைத் திருப்ப காஸ்கஞ்ச் மதவெறி தாக்குதல் பயன்படுத்தப்படுகிறது. உயிரிழந்த சந்தன், ஒரு கண் பார்வையை இழந்துவிட்ட அக்ரம் போன்ற இளைஞர்கள், பாஜகவின் ஆர்எஸ்எஸ்சின் அதுபோன்ற மதவெறி பிரித்தாளும் சூழ்ச்சியில் தீனியாக பயன்படுத்தப்படுபவர்களே.

பாஜகவின், அதன் அடிமை ஊடகங்களின் வெறித்தனமான முயற்சிகளுக்கும் அப்பால், காஸ்கஞ்ச் பற்றிய உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றை பின்தள்ள முடியவில்லை. நாடாளுமன்றத் தேர்தல்கள் நெருங்க நெருங்க, பரேலி மாவட்ட ஆட்சியர் அம்பலப்படுத்தியதுபோல், காஸ்கஞ்ச் போன்ற நிகழ்வுகளை மீண்டும் நிகழ்த்த பாஜக முயற்சி செய்யும். அதுபோன்ற மதவெறிச் சதிகளை முறியடிக்க இந்திய மக்களும் மக்கள் இயக்கங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். விலை உயர்வு, வேலைவாய்ப்பு, பெண்களுக்கு எதிரான வன்முறை, தலித்துகள், ஒடுக்கப்பட்ட சாதியினரின் அதிகாரம், விவசாயிகளின் தொழிலாளர்களின் உரிமைகள் ஆகிய பிரச்சனைகளில் அரசை பொறுப்பாக்க வேண்டும்.

Thursday, January 4, 2018

பீமா கோரேகான் போரின் ஆண்டுதினத்தை அனுசரித்த தலித் - பகுஜன் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மகாராஷ்டிரா அரசாங்கமே பொறுப்பு

1818ல் நடந்த பீமா கோரேகான் போரில், பெரும்பான்மையாக மஹர் தலித் போர்வீரர்களைக் கொண்ட பிரிட்டிஷ் பாம்பே படை, பெஷாவா படையை தோற்கடித்ததன் ஆண்டு தினத்தை, புனே அருகில் உள்ள பீமா கோரேகானில் தலித்துகளும் பகுஜன்களும் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 1 அன்று அனுசரிக்கிறார்கள். பிராமண பெஷாவாக்களுக்கு எதிரான போரில் பெற்ற வெற்றியாக தலித்துகள் இந்த வெற்றியை போற்றுகிறார்கள். இந்த ஆண்டு இந்த அனுசரிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால், இது அந்த வெற்றியின் 200ஆவது ஆண்டு.

ஆனால், இந்த ஆண்டு அந்த விழாவுக்காக கூடியிருந்த மக்கள், காவிக் கொடிகள் தாங்கிய குண்டர்களால் கொடூரமாக தாக்கப்பட்டனர். ஒருவர் உயிரிழந்தார். பலர் படுகாயமுற்றனர். பீமா கோரேகானுக்கு அருகில் உள்ள வாது புத்ருக் பகுதியில் தலித்துகள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது. அந்த விழாவுக்குச் செல்லும் வழியெங்கும் தலித்துகளுக்கு எதிராக சமூகப் புறக்கணிப்பு கட்டமைக்கப்பட்டது.

பீமா கோரோகானில் தலித் மக்கள் பெரும் எண்ணிக்கையில் திரள்வார்கள் என்று தெரிந்திருந்த போதும், அங்கு கூடுபவர்கள் பாதுகாப்புக்கு குறைந்த அளவிலான காவல்துறையினரே இருந்தனர். சமஸ்த் இந்து அகாதியின் மிலிந் எக்போட், ஷிவ் பிரதிஷ்தன் இந்துஸ்தான் அமைப்பின் சம்பாஜி பிடே ஆகியோர் இந்தத் தாக்குதலுக்கு தலைமை தாங்கினர். எக்போட் பாஜகவின் முன்னாள் கவுன்சிலர். பிடே பாஜக மற்றும் சிவசேனா உயர்மட்ட தலைவர்களுக்கு நெருக்கமானவர்.

பீமா கோரேகானில் கூடியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து ஜனவரி 2 அன்று மும்பையிலும் மகாராஷ்டிராவின் பல பகுதிகளிலும் தலித் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பு நிகழ்ச்சிகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஊடகங்களில் சிலர் இந்தத் தாக்குதலை சாதிய மோதல்கள் என்று முன்வைக்கிறார்கள். இந்தத் தாக்குதலை தூண்டியதற்கு தலித் செயல்பாட்டாளர்கள், தலித் அறுதியிடல்தான் காரணம் என்கிறார்கள்.

நியாயமான நவ பெஷாவா ஆட்சி என்று அழைக்கப்படுகிற தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான பாஜக அரசாங்கம் தலித் மக்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு எதிராக ஜனவரி 3 அன்று மகாராஷ்டிராவில் நடக்கவுள்ள முழுஅடைப்புக்கு இககமாலெ ஆதரவு தெரிவிக்கிறது. மகாராஷ்டிரா முழுஅடைப்புக்கு ஒருமைப்பாடு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்த இகக மாலெ அழைப்பு விடுக்கிறது.
பிரபாத் குமார்
இககமாலெ
மத்தியகமிட்டி
உடனடி முத்தலாக் மசோதா: அவசரகதியிலானது. ஒருதலைபட்சமானது. அநீதியானது

உடனடி முத்தலாக், குற்றம் என்று சொல்லும் இசுலாமிய பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா, 2017 பிழையானது. முரணானது.

Monday, December 11, 2017

டிசம்பர் 18, 2017 உறுதிமொழி:
பாசிச தாக்குதலுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை முன்னகர்த்துவோம்! 
இகக மாலெயின் பத்தாவது காங்கிரசை பெருவெற்றி பெறச் செய்வோம்!

மோடியின் கொடுங்கோல் ஆட்சியின் நான்காவது ஆண்டில் நாம் இருக்கிறோம். இந்த ஆட்சி ஒவ்வொரு நாளும் நாட்டை மேலும் ஆழமான நெருக்கடியில் தள்ளுகிறது. மக்கள் மீது ஓர் ஒட்டுமொத்த போர் தொடுத்துள்ள இதுபோன்ற ஓர் அரசாங்கத்தை நாடு இதற்கு முன் கண்டதில்லை.

Wednesday, December 6, 2017

பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள்:
நீதிக்கான போராட்டம் தொடர்கிறது

25 ஆண்டுகளுக்கு முன் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, இந்தியாவின் மதச்சார்பின்மைக்கும் ஜனநாயகத்துக்கும் ஏற்பட்ட காயங்கள் இன்னும் ஆறவில்லை. மசூதி இருந்த இடத்தில் கோவில் கட்ட பாஜக அரசாங்கங்களும் அவற்றின் முகவர்களும் எடுக்கும் முயற்சிகள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.

Friday, December 1, 2017

அரசியல்சாசன நாள்: 2017
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற லட்சியத்தைப் பாதுகாப்போம்

1949 நவம்பர் 26 அன்று இந்திய அரசியல் சாசனம் பிரகடனப்படுத்தப்பட்டு அறுபத்தெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அரசியல் சாசனம் பிரகடனப்படுத்தப்பட்டது ஒரு முக்கியமான நிகழ்வுதான்;

Sunday, November 26, 2017

இகக மாலெயின் பத்தாவது காங்கிரஸ், மான்சா, 23 - 28 மார்ச் 2018

வேண்டுகோள்

பாசிச சக்திகளை முறியடிப்போம் மக்கள் எதிர்ப்பை அறுதியிடுவோம்!
சமூக, பொருளாதார மாற்றத்துக்கான, சமத்துவத்துக்கான, கவுரவத்துக்கான
போராட்டங்களை வலுப்படுத்துவோம்!
பகத் சிங்கின் அவரது தோழர்களின் மரபை உயர்த்திப் பிடிப்போம்!
இகக மாலெயின் பத்தாவது காங்கிரசை பெருவெற்றி பெறச் செய்வோம்!

நண்பர்களே

Thursday, November 23, 2017

மத்திய புலனாய்வு துறை நீதிபதி லோயாவின் மரணம் எழுப்பும் திடுக்கிடும் கேள்விகள்

நரேந்திர மோடியின் படைத்தளபதி அமித் ஷா மற்றும் குஜராத் காவல்துறையின் பல உயரதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டுள்ள சொராபுதீன் கொலை வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த மத்திய புலனாய்வு துறை சிறப்பு நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா, அந்த வழக்கில் அடுத்த விசாரணை நடப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, 2014, நவம்பர் 30 அன்று நாக்பூர் அரசு விருந்தினர் மாளிகையில் திடீரென மரணமுற்றார்.